×

சாத்தான்குளம் அருகே பரபரப்பு; காரில் பதுக்கிய 56.5 கிலோ புகையிலை பொருள் சிக்கியது: வாலிபர் கைது

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக காரில் பதுக்கி வைத்திருந்த 56.5 கிலோ புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபரை கைது செய்த நிலையில் அவரிடம் இருந்து சொகுசு கார் மற்றும் ரூ.1.53 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக பதுக்கி இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் உத்தரவின்பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன், எஸ்.ஐ. சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு சட்டவிரோத கும்பலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் அருகேயுள்ள தேர்க்கன்குளம் கிராமத்தில் கல்குவாரி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற காரில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது. இதையடுத்து புகையிலை பொருள் கடத்தல் தொடர்பாக காரில் வந்த தேர்க்கன்குளத்தை சேர்ந்த ராமசாமி மகன் பச்சைமால்(25) என்பவரை கைது செய்ததுடன் காரில் பதுக்கி வைத்திருந்த மொத்தம் 56.5 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.1.53 லட்சம் ரொக்கம் மற்றும் சொகுசுகார் ஆகியற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தனிப்டை போலீசார், புகையிலை கடத்தல் மற்றும் விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். காரில் பதுக்கிய புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சாத்தான்குளம் அருகே பரபரப்பு; காரில் பதுக்கிய 56.5 கிலோ புகையிலை பொருள் சிக்கியது: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Bustle ,Satankulam ,Chathankulam ,Dinakaran ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்