×

பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க தவறியவர்களிடம் இருந்து ரூ.600 கோடி அபராதம் வசூல்: ஒன்றிய அரசு

பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க தவறியவர்களிடம் இருந்து ரூ.600 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க 2023 ஜூன் 30-ம் தேதி வரை ஒன்றிய அரசு அவகாசம் அளித்திருந்தது. 2023 ஜூன் 30-க்குப் பின் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. தாமதமாக இணைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் 2023 ஜூலை 1 முதல் 2024 ஜன.31 வரை ரூ.601.97 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

The post பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க தவறியவர்களிடம் இருந்து ரூ.600 கோடி அபராதம் வசூல்: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : PAN ,Union Govt ,Union Government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை