×

குன்னூரில் சாலை வசதி இல்லாத கிராமத்தில் இருந்து ஜொலிக்கும் மாற்றுத்திறனாளி வீரர்; கேலோ இந்தியா பாரா கேம்ஸில் வெள்ளி வென்றார்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சாலை வசதி இல்லாத தங்கள் கிராம மக்களின் துயரை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதற்காக கேலோ இந்தியா பாரா போட்டிகளில் பங்கேற்று வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார் அரசு பள்ளி மாணவர் விடுதிக்காப்பாளராக பணியாற்றும் சரவணன். குன்னூர் அருகே அறவங்கக்காடு குண்டாடா கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் – அஞ்சலி தம்பதியின் மகன் சரவணன். மாற்றுத்திறனாளியான இவர், தும்மனட்டியில் இயங்கும் அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக பணியாற்றுகிறார்.

கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் சிறு வயது முதலே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட சரவணனை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அவரது தந்தையும் சகோதரரும் முதுகில் சுமந்துகொண்டு பயிற்சிக்கு அழைத்து சென்றுள்ளனர். சாலை வசதி இல்லாததால் முதியவர்களும், கர்ப்பிணிகளும் மருத்துவமனைக்கு செல்ல, தொட்டில் கட்டியும், முதுகில் சுமந்து செல்வதாக கூறும் சரவணன், பல ஆண்டுகளாக பல கட்சிகளிடம் சாலை வசதி வேண்டி கோரிக்கை விடுத்தும் பலனளிக்கவில்லை என்கிறார்.

ஊடகங்கள் மற்றும் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே கடந்த டிசம்பர் மாதம் 10 முதல் 17ம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா பாரா கேம்ஸில், பாரா பவர் லிப்ஸ்டிங் போட்டியில் பங்கேற்றதாக கூறும் சரவணன், தமிழ்நாடு சார்பில் 65 எடை பிரிவில் பங்கேற்று 150 கிலோ எடையை தூக்கி தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். வீடு முழுவதும் பதக்கங்களை குவித்துள்ள சரவணன், சாலை வசதி இல்லாத தங்களது கிராமத்திற்கு தமிழ்நாடு அரசு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

The post குன்னூரில் சாலை வசதி இல்லாத கிராமத்தில் இருந்து ஜொலிக்கும் மாற்றுத்திறனாளி வீரர்; கேலோ இந்தியா பாரா கேம்ஸில் வெள்ளி வென்றார்..!! appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Gallow ,India Para Games ,Nilgiris ,Saravanan ,Gallo India Para Games ,Nilgiris district ,Coonoor… ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...