×

சேலத்தில் சாலையில் நடந்து சென்றவர் மீது கார் மோதிய விபத்தில் உயிரிழப்பு: பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு

சேலம்: சேலத்தில் சாலையில் நடந்து சென்றவர் மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்தவரின் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. சேலம் செவ்வாய்பேட்டை, அர்ச்சராமன் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் வெள்ளி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காலை வீட்டிலிருந்து பால் வாங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் கடையில் பால் வாங்கி கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது அவரது பின் புறமாக அதிவேகமாக வந்த கார் ஒன்று சங்கர் மீது வேகமாக மோதி தூக்கி வீசியது. இதில் படுகாயமுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கர் 4 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர். சங்கரின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக விபத்து என்று காவல் துறையினர் பதிவு செய்திருந்த நிலையில் இப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களை செவ்வாய்பேட்டை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.

அதில் சங்கர் நடந்து செல்லும் காட்சிகளும், சங்கரின் பின்புறம் வேகமாக வந்த கார் ஒன்று மோதி தூக்கி வீசப்பட்டு வேகமாக அந்த பகுதியில் கடந்து செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. பின்னர் சிசிடிவி காட்சிகளை கொண்டு செவ்வாய்பேட்டை காவல் துறையினர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது விபத்து காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post சேலத்தில் சாலையில் நடந்து சென்றவர் மீது கார் மோதிய விபத்தில் உயிரிழப்பு: பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Salem ,Sankar ,Archaraman ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்