×

மீண்டும் நான் தூத்துக்குடியில் போட்டியிடுவதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார்: எம்.பி. கனிமொழி பேட்டி

தூத்துக்குடி: மீண்டும் நான் தூத்துக்குடியில் போட்டியிடுவதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக தேர்தல் தயாரிப்பு குழு மக்களிடம் கருத்து கேட்கும் பணியை தொடங்கியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள மாணிக்கம் மகாலில் இந்த கருத்து கணிப்பு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் துணை செயலாளர் கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளனர். தொழிற் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், மாணவர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

நாளை கன்னியாகுமரியிலும் வரும் 7ம் தேதி மதுரையிலும் வரும் 8ம் தேதி தஞ்சாவூரிலும் திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கை குழுவின் கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு பின் எம்.பி கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மீண்டும் நான் தூத்துக்குடியில் போட்டியிடுவதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார். தேர்தல் அறிக்கை தொடர்பாக ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களிடம் கருத்து கேட்க உள்ளோம். பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு விரைவில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post மீண்டும் நான் தூத்துக்குடியில் போட்டியிடுவதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார்: எம்.பி. கனிமொழி பேட்டி appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,Tuticorin ,M.P. Kanimozhi ,Thoothukudi ,Chief Minister ,M. K. Stalin ,Kanimozhi ,DMK Election Preparation Committee ,Manikkam ,M.K.Stalin ,
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...