ஆந்திரா: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் பும்ரா, அஸ்வின் தலா 3, முகேஷ்குமார், குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் இந்தியா 396 ரன்னும், இங்கிலாந்து அணி 253 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தன. 143 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் ஆடிய இந்திய அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்சில் இந்திய அணி 255 ரன் எடுத்து இங்கிலாந்துக்கு 399 ரன் இலக்கு நிர்ணயித்திருந்தது.
இந்திய அணி நிர்ணயித்த 399 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஸாக் க்ராலி 73, ஃபோகஸ், ஹார்ட்லி தலா 36 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் இரட்டை சதமும், 2வது இன்னிங்சில் கில் சதமும் அடித்திருந்தனர். இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒன்றில் வென்று சமநிலை பெற்றன. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, 2வது போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்துள்ளது.
The post இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!! appeared first on Dinakaran.