×

நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு

புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக நடந்த பேச்சுவார்த்தையில் பாஜக போட்டியிட முதல்வர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்திருந்தார். ரங்கசாமி சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிட என்.ஆர்.காங். நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதுச்சேரி தொகுதியில் தங்கள் கட்சியே போட்டியிட வேண்டும் என்று ரங்கசாமியிடம் என்.ஆர்.காங். நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். வரும் 7-ம் தேதி என்.ஆர்.காங். கட்சியின் ஆண்டு விழாவில் முடிவு எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : NR Congress ,BJP ,Puducherry ,Chief Minister ,Rangaswamy ,Rangasamy ,
× RELATED வாக்காளர்களுக்கு குக்கர் கொடுக்கும் பாஜ வேட்பாளர்: வீடியோ வைரல்