×

எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு : ஐபிஎஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!!

டெல்லி : கிரிக்கெட் வீரர் தோனி குறித்து கருத்து தெரிவித்ததற்காக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு விதித்த 15 நாள் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தோனி தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர்மோகன் வழங்கிய தீர்ப்பில்,”சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சாதாரண சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேல் முறையீடு செய்வதற்காக தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது,”. இவ்வாறு கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஐபிஎஸ் அதிகார சம்பத் குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புய்யன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிக்கெட் வீரர் தோனி குறித்து கருத்து தெரிவித்ததற்காக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 15 நாள் தண்டனையை இடைக்காமலமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் சம்பத் குமார் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு தோனிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

The post எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு : ஐபிஎஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : MS Dhoni ,Delhi ,Sampath Kumar ,Dhoni ,IPL ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதியகட்டடம் இடிந்து விபத்து!!