×

உளுந்தூர்பேட்டை அருகே காக்கட்டான் பூக்கள் போதிய விலை போகாததால் பறிக்காமல் காய்ந்து கொட்டும் அவலம்

*விவசாயிகள் கவலை

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.மலையனூர் கிராமம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில் தோட்டக்கலை பயிரான காக்கட்டான் பூ அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். தற்போது காக்கட்டான் பூக்கள் அதிகளவில் விளைச்சல் இருந்தாலும் போதிய விலை போகாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி காமராஜ் என்பவர் தெரிவித்த போது, காக்கட்டான் பூக்கள் ஏற்கனவே ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.50க்கு மட்டுமே விலை போவதால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகளவில் பூ பூப்பதற்காக கூடுதல் செலவு செய்தும் தற்போது பூ விலை குறைவாக இருப்பதால் இதனை பறிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் இருக்கின்ற பூவை பறிக்க ஆட்களுக்கு அதிக கூலி கொடுக்க வேண்டிய நிலை உள்ளதால் காக்கட்டான் பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவித்தார். 25 சென்ட் இடத்துக்கு காக்கட்டான் பூ பயிரிட்டு வளர்க்க ரூ.1 லட்சம் வரையில் செலவு செய்து ரூ.20 ஆயிரம் கூட கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ஒரு கிலோ காக்கட்டான் பூ விலை ரூ.50க்கு விற்பனையாகிறது. ஆனால் இதை பறிப்பதற்கு கூலியாக ரூ.150 கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பூக்களை பறிக்காமல் விடுவதால் காய்ந்து விவசாய நிலங்களிலேயே கொட்டி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே காக்கட்டான் பூக்கள் போதிய விலை போகாததால் பறிக்காமல் காய்ந்து கொட்டும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Kallakurichi district ,Pu.Malayanur ,
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை...