×

இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரையும், விசைப்படகையும் விடுதலை செய்யக் கோரி போராட்டம்..!!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். இரவில் மீன்பிடித்துகொண்டிருந்த போது ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் அங்கிருந்து மீனவர்களை விரட்டியடித்தனர். ஒரு சில படகுகளை ரோந்து கப்பலில் தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.

அப்போது தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் ஜேம்ஸ், சகாயராஜ் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். இதனை பார்த்த சக மீனவர்கள் தங்களுடைய படகுகளை வேறு பகுதிக்கு ஓட்டி சென்று இரவு முழுவதும் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பினர். சிறைபிடிக்கப்பட்ட இரண்டு படகில் இருந்த மீனவர்கள் அந்தோணி, இளங்கோ, அமுல், சுபாஷ் சந்திரபோஸ், சுதாகர், மணி, பெக்கர், சேவியர், ஆரோக்கிய ரஞ்சித் உள்ளிட்ட 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் ஊர்காவல்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

சிறைபிடித்த 23 மீனவர்களையும் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை கடல் தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் பிப். 14ம் தேதி வரை சிறையில் அடைக்க யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இச்சம்பவத்தை அடுத்து இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரையும், விசைப்படகையும் விடுதலை செய்யக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

The post இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரையும், விசைப்படகையும் விடுதலை செய்யக் கோரி போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Rameshwaram ,RAMESWARAM ,RAMESWARAM FISHERMEN ,Bak Strait Sea ,Sri Lankan Marines ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை