×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கந்தர்வகோட்டையில் சமுதாய வளைகாப்பு விழா

 

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் மாவட்ட மகளிர் அணி சார்பாக திமுக மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்46 வது பிறந்த நாளை முன்னிட்டு கந்தர்வகோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி செயலாளர் தவசுமணி முருகேசன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட குழு தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், கறம்பக்குடி ஒன்றியக்குழு தலைவர் மாலா ராஜேந்திரன் ஆகியோர் கர்ப்பிணி பெண்களுக்கு மலர் மாலை, கண்ணாடி வளையல்கள், சந்தனம், குங்குமம், மலர்கள் போன்ற அணிகலன்களை அணிந்து கவுரவித்தனர்.

தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு புளியோதரை, எலுமிச்சைசாதம், சர்க்கரை பொங்கல், தேங்காய் சாதம், சாம்பார் சாதம், மோர் மிளகாய், அரிசி வத்தல், காய்கறி கூட்டுடன் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக தலைமை கழக பேச்சாளருமான கவிதை பித்தன், தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் கோமாபுரம் தமிழ் ஐயா, நகர செயலாளர் மற்றும் மாவட்ட மீனவர் அணி அமைப்பளார் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அட்மா சேர்மன் ராஜேந்திரன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜானகிராமன் ஒன்றிய கவுன்சிலர் பாரதி பிரியா, குழந்தைகள் வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரேவதி, புது நகர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மணிமாறன் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எம்எல்ஏ சின்னத்துரை திறந்துவைத்தார்

 

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கந்தர்வகோட்டையில் சமுதாய வளைகாப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Gandharvakot ,Minister ,Udayanidhi Stalin ,Gandharvakottai ,DMK State ,Youth Secretary ,Youth Welfare and ,Sports Development ,Udhayanidhi Stalin ,Kandharvakothai ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...