×

பெரியகுளம் அருகே ரூ.91 லட்சத்தில் சாலைப் பணி தீவிரம்

பெரியகுளம், பிப். 5: பெரியகுளம் கீழவடகரை பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சி ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள பிரதான சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருந்து வந்தது. இந்தப் பாதை வழியாக சுற்றுலாத்தலமான கும்பக்கரை அருவி, கொடைக்கானலுக்கு வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதியில் குடியிருப்பவர்களும் சேதமடைந்த சாலையால் மிகவும் அவதி அடைந்து வந்தனர்.

இந்நிலையில், முதல்-அமைச்சரின் கிராம சாலைகளின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் சேகர் ஆகியோரது மேற்பார்வையில் நடைபெற்றது. மேலும் இந்த பணியினை ஊராட்சி தலைவர் செல்வராணி செல்வராஜ் ஆய்வு செய்தார். தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post பெரியகுளம் அருகே ரூ.91 லட்சத்தில் சாலைப் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Tarchala ,Periyakulam Keezhawatakarai ,State Bank Colony ,Keezhawatakarai Panchayat ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்தில் நிறுவன பங்களிப்பு நிதியில் கண்மாய் தூர்வாரும் பணி