×

பழநியில் பெருந்திட்ட வரைவிற்கான நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம்: அமைச்சர் அர.சக்கரபாணி பேட்டி

 

பழநி, பிப். 5: பழநியில் பெருந்திட்ட வரைவிற்கான நிலம் கையகப்படுத்தும் பணி துவங்க உள்ளதாக, அமைச்சர் அர.சக்கரபாணி கூறியுள்ளார். பழநிக்கு நேற்று வருகை தந்த உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழநியில் பெருந்திட்ட வரைவிற்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்க உள்ளது. இந்த பணிகள் முடிவு பெற்றவுடன், திருப்பதிக்கு இணையாக பழநி கோயிலிலும் அனைத்து வசதிகளும் இடம்பெறும். தமிழகத்தில் விலை இல்லா அரிசி வழங்கப்படுகிறது.

எனவே, மலிவு விலை அரிசி விற்பனை தேவையில்லை. தமிழகத்தில் அரிசி ஆலைகள் எண்ணிக்கை 700 ஆக உயர்த்தப்பட்டு, அங்கு 12 லட்சம் டன் நெல் அரைக்கப்படுகிறது. மேலும் தஞ்சை, திருவாரூர், தேனி உள்ளிட்ட இடங்களிலும் அரிசி ஆலை அமைக்கும் பணி நடக்கிறது. அதேபோல் ரூ.400 கோடியில் செமி குடோன் அமைக்கப்பட்டு வருகிறது. பழநி – தாராபுரம் நான்கு வழிச்சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது.

அந்த பணிகள் முடிந்தவுடன் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். பழநி கோயிலுக்கு புதிதாக வாங்கப்பட்ட ஆம்புலன்சில் நவீன இயந்திரம் பொருத்தப்பட்ட பின்பு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ஜனநாயக நாட்டில் நடிகர் விஜய் உள்பட யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். இதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு கூறினார்.

The post பழநியில் பெருந்திட்ட வரைவிற்கான நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம்: அமைச்சர் அர.சக்கரபாணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Perundhitta ,Palani ,Minister ,Ar. Chakrapani ,A. Chakrapani ,Perunditha ,Ar.Chakarapani ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை