×

கிருஷ்ணராயபுரம் பகுதியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

 

கிருஷ்ணராயபுரம். பிப்.5: கிருஷ்ணராயபுரம் பகுதியில் தேசிய தொழுநோய் எதிர்ப்புத் திட்டம் கீழ் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு திட்டம் கீழ் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்கள் ஜன.30 முதல் பிப்.14 வரை நடைபெறுகிறது. பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமில்லா மேற்பார்வையாளர் பால்மாணிக்கம் தலைமையில் சேங்கல் அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் சார்ந்த மலைப்பட்டி துணை சுகாதார பகுதிகளில் தொழுநோய் விழிப்புணர்வு குறித்து மலைப்பட்டி நரிகுறவர் காலணி பகுதியில் தொழுநோய் கண்டுபிடிப்பு பணி மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருக்காம்புலியூர் ஊராட்சியில் எழுதியாம்பட்டி பகுதியில் உள்ள செங்கல் சூளை தொழிலாளர்களிடம் தொழுநோய் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது. மேலும் தொழுநோய் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் அப்பகுதியில் 100 நாட்கள் பயனாளர்கள் மத்தியில் தொழுநோய் விளக்கவுரை ஆற்றப்பட்டது. இந்நிகழ்வில் கிராம சுகாதார செவிலியர் சூர்யா மற்றும் கோகிலா, தீபிகா, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணராயபுரம் பகுதியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram ,Spursh ,Karur District, ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே கடன் பிரச்னையால் பூ வியாபாரி தற்கொலை