×

தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

 

காரிமங்கலம், பிப்.5: காரிமங்கலம் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய ஒன்றிய திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, ராஜகுமாரி, பொருளாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேர்மன் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், வக்கீல் கோபால், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கூட்டத்திற்கு தலைமை வகித்து, தேர்தல் பொறுப்பாளர்கள் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

மகளிர் உரிமை தொகை உட்பட அரசின் பல்வேறு சாதனை திட்டங்கள் குறித்து, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்களிடம் எடுத்துச் சென்று, திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற செய்யவும், தற்போதைய தேர்தல் பணிகளை துவக்கவும் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் அவை தலைவர்கள் தீர்த்தகிரி, முனுசாமி, முன்னாள் அவை தலைவர் தனக்கோடி, துணை செயலாளர்கள் தங்கதுரை, சண்முகம், பொருளாளர்கள் செந்தில்குமார், மாரியப்பன், கண்ணபெருமாள், விவசாய அணி குமார், உமா குப்புராஜ், ஐடி விங் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,DMK ,West District DMK ,District Deputy Secretary ,Vakeel Mani ,Rajakumari ,Treasurer ,Murugan ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக...