×

2வது இன்னிங்சில் ஆப்கான் பதிலடி

கொழும்பு: இலங்கை அணியுடன் கொழும்புவில் நடக்கும் டெஸ்ட் போட்டியில், ஆப்கான் 2வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்துள்ளது. எஸ்எஸ் கிளப் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆப்கான் 198 ரன்னுக்கு சுருண்ட நிலையில், இலங்கை 439 ரன் குவித்து வலுவான முன்னிலை பெற்றது. கருணரத்னே 77, ஏஞ்சலோ 141, சண்டிமல் 107 ரன் விளாசினர்.

ஆப்கான் பந்துவீச்சில் நவீத் ஸத்ரன் 4, நிஜத் மசூத், குவாயிஸ் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 241 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கான், 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்துள்ளது. நூர் அலி 47 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இப்ராகிம் ஸத்ரன் 101 ரன், ரகமத் ஷா 46 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

 

The post 2வது இன்னிங்சில் ஆப்கான் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Colombo ,Sri Lanka ,SS ,Club ,Dinakaran ,
× RELATED இலங்கை கார் பந்தய விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப பலி, 23 பேர் படுகாயம்