×

வில்லியம்சன் 112*, ரவிந்திரா 118* நியூசிலாந்து ரன் குவிப்பு

மவுன்ட் மவுங்கானுயி: தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டெஸ்டில், கேன் வில்லியம்சன் – ரச்சின் ரவிந்திரா ஜோடியின் அபார ஆட்டத்தால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்துள்ளது.
பே ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. லாதம், கான்வே இணைந்து நியூசி. இன்னிங்சை தொடங்கினர். கான்வே 1 ரன், லாதம் 20 ரன் எடுத்து வெளியேற, நியூசி. 16.5 ஓவரில் 39 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், வில்லியம்சன் – ரவிந்திரா ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் சதம் விளாசி அசத்தினர். முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்துள்ளது (86 ஓவர்). வில்லியம்சன் 112 ரன் (259 பந்து, 15 பவுண்டரி), ரவிந்திரா 118 ரன்னுடன் (211 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்) களத்தில் உள்ளனர். தென் ஆப்ரிக்கா பந்துவீச்சில் ஷெபோ மோரெகி, டேன் பேட்டர்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

 

The post வில்லியம்சன் 112*, ரவிந்திரா 118* நியூசிலாந்து ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Williamson ,Ravindra ,New Zealand ,Mount Maunganui ,South Africa ,Kane Williamson-Rachin Ravindra ,Bay Oval ,Zealand ,Dinakaran ,
× RELATED 4வது டி20ல் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து