×

சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: சமீபத்தில் நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் 20 வாக்குகள் பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளரின் 8 ஓட்டுகள் செல்லாது என அறிவித்த தேர்தல் அதிகாரி, 16 வாக்குகள் பெற்ற பாஜ வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதில் மோசடி நடந்திருப்பதாகவும், திட்டமிட்டு 8 ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக மேயர் தேர்தல் நீதிபதி கண்காணிப்பில் நடத்தக் கோரியும் ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், 3 வாரத்திற்கு பின் விசாரணையை ஒத்தி வைத்தது. இதை எதிர்த்து ஆம் ஆத்மி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

 

The post சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,Supreme Court ,NEW DELHI ,Chandigarh mayoral ,BJP ,Aam Aadmi Party ,Dinakaran ,
× RELATED பல்வேறு முறைகேடுகளுடன் நடந்து...