×

காஷ்மீரில் நீடிக்கும் கடும் பனிப்பொழிவு விமான சேவைகள் ரத்து

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாகவே கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்த்கை முடங்கி உள்ளது. சமவௌி பகுதிகளில் மிதமான பனிப்பொழிவும், உயரமான பகுதிகளில் கடும் பனிப்பொழிவும் நீடிக்கிறது. கடும் பனியால் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் படர்ந்துள்ள பனியை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு முதல் கடும் பனியால் ஸ்ரீ நகர் மற்றும் லே விமான நிலைய ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் வௌியிட்ட அறிவிப்பில், “மோசமான வானிலை காரணமாக மும்பையில் இருந்து ஸ்ரீ நகர் செல்லும் 4 விமானங்களும், லே செல்லும் 2 விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post காஷ்மீரில் நீடிக்கும் கடும் பனிப்பொழிவு விமான சேவைகள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Sri Nagar ,Jammu and ,Samavai ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது...