×

மீனவர்கள் கைதாவதை தடுத்து நிறுத்த வேண்டும்: ராமதாஸ், பாலகிருஷ்ணன், வாசன் கோரிக்கை

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டது, கொள்ளையர் தாக்குதல் நடத்தியது குறித்து ராமதாஸ், பாலகிருஷ்ணன், ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்ததோடு, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

* பாமக நிறுவனர் ராமதாஸ்: வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 23 பேரை கச்சத்தீவு அருகே சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை சிங்களப்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு முடிவு கட்ட வேண்டும்.

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆறுக்காட்டுதுறையிலிருந்து தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடந்த 2ம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் நமது நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து ஆயுதங்களால் தாக்கி, ஜி.பி.எஸ். கருவிகள், செல்போன், கடிகாரம், பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாட்டிற்கு விரோதமான போக்கை கைவிட்டு, நிரந்தர தீர்வை ஏற்படுத்திட வேண்டும்.

* தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதும், ராமேஸ்வரம் 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றதும் கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post மீனவர்கள் கைதாவதை தடுத்து நிறுத்த வேண்டும்: ராமதாஸ், பாலகிருஷ்ணன், வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Balakrishnan ,Vasan ,Chennai ,GK Vasan ,Rameswaram ,Union Government ,Bamaka ,Ramadas ,Tamil Nadu ,Bay of Bengal ,
× RELATED குழந்தைகளுக்கு எதிரான பாலியல்...