×

கூடலூர் சிவன் கோயிலில் ஆசி வழங்க ரோபோ யானை: ரூ. 8 லட்சம் செலவில் பரிசளித்த பக்தர்

கூடலூர்: கூடலூர் அருகே சிவன் கோயிலுக்கு ரூ. 8 லட்சம் செலவில் ரோபோ யானையை பக்தர் ஒருவர் பரிசாளித்துள்ளார். கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை பஜாரில் உள்ள சிவன் கோயிலுக்கு பக்தர் ஒருவர் சுமார் ரூ. 8 லட்சம் பெறுமதி உள்ள ரோபோ யானை ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த யானை கோவில் வளாகத்தில் வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கவும் திருவிழா காலங்களில் ஊர்வலத்தில் கலந்து கொள்ளவும் பயன்படுத்தப்பட உள்ளது. உயிருள்ள யானையை போலவே துதிக்கையை தூக்கி ஆசி வழங்கி, கண்ணை சிமிட்டி, வாலை ஆட்டி சாலையில் நடந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த யானையை கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை பூர்வீகமாக கொண்ட வரும் கனடா நாட்டில் வசித்து வருபவருமான சங்கீதா என்பவர் கோவிலுக்கு தானமாக வழங்கி உள்ளார். உயிருள்ள நிஜ யானைகளை கோவில்களில் வளர்ப்பது மற்றும் ஊர்வலத்தில் கொண்டு செல்வது போன்ற நிகழ்வுகளில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், கோவில் கமிட்டி தலைவர் பாலகோபால், பொருளாளர் சதீஷ்குமார், செயலாளர் ரங்கசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அங்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ரோபோ யானையின் செயல்பாடுகளை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

 

The post கூடலூர் சிவன் கோயிலில் ஆசி வழங்க ரோபோ யானை: ரூ. 8 லட்சம் செலவில் பரிசளித்த பக்தர் appeared first on Dinakaran.

Tags : Shiva temple ,Kudalur ,Devar Cholai Bazar ,
× RELATED (வேலூர்) கொட்டகையில் இருந்த ஆட்டை...