×

உத்தரப்பிரதேசத்தில் அரசின் சார்பில் 568 ஜோடிகளுக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தில் பெரும் முறைகேடு: 15 பேர் கைது

உத்தப்பிரதேசம்: பலியா மாவட்டத்தில் உள்ள மணியா நகரில் கடந்த மாதம் 25ம் தேதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேட்கி சிங் முன்னிலையில் திருமணம் நடந்தது. அரசு வழங்கும் திருமண உதவித்தொகை, சீர்வரிசைகளை முறைகேடாக அபகரிப்பதற்காக போலி திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புகாரின்பேரில் உ.பி. போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில் திருமணம் செய்து வைக்கப்பட்ட 568 ஜோடிகளின் சுமார் 200 ஜோடிகள் போலியானவை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசு உதவித்தொகையை அபரிப்பதற்காக முறைகேட்டில் ஈடுப்பட 2 அரசு அதிகாரிகள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் திருமண மோசடி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

போலி ஜோடிகளை ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட திருமண விழாவின் மூலம் சுமார் ரூ. 2 கோடி அளவுக்கு பணம் சுருட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியாக மணப்பெண், மணமகனாக படித்தவர்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 2000 வரை பணம் கொடுத்தது அம்பலமானது. திருமணம் பார்க்க வந்த சில இளைஞர்களை பணம் கொடுத்து மணமகனாக நடிக்க வைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. உத்தரப்பிரதேசத்தில் அரசின் சார்பில் 568 ஜோடிகளுக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தில் பெரும் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

The post உத்தரப்பிரதேசத்தில் அரசின் சார்பில் 568 ஜோடிகளுக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தில் பெரும் முறைகேடு: 15 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Mania Nagar, Ballia district ,J. K. M. L. A. ,Katki Singh ,Dinakaran ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...