×

சிலி நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 51 பேர் உயிரிழப்பு

சிலி: சிலி நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 51 பேர் உயிருலந்துள்ளனர். வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

சிலி நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் தீ பரவியதால் இதுவரை சுமார் 51 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் சுமார் 1000 வீடுகள் எரிந்து சாம்பலாயின.

சிலியின் உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா கூறுகையில், தற்போது நாட்டின் மத்திய மற்றும் தெற்கில் உள்ள 92 காடுகள் தீயின் பிடியில் சிக்கியுள்ளன. இந்த வாரம் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்தது. வால்பரைசோ பகுதியில் மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற அவசர வாகனங்களை இயக்க அனுமதிக்க மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.

உயிரிழந்த 51 பேர் குறித்த எந்த விவரங்களையும் உள்துறை அமைச்சர் தோஹா இதுவரை வெளியிடவில்லை. வால்பரைசோ பகுதியில் மூன்று முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிலியின் உள்துறை அமைச்சர் தோஹா கூறுகையில், மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுக்கள் இன்னும் போராடி வருகின்றன. தீயை கட்டுப்படுத்த 19 ஹெலிகாப்டர்கள் மற்றும் 450க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post சிலி நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 51 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chile ,Dinakaran ,
× RELATED பூத் சிலிப் மட்டும் இருந்தால் போதாது;...