- விஜய ரகுநாத நாயக்கர் 349வது குரு பூஜை விழா
- ராஜகோபால சுவாமி கோயில்
- தஞ்சாவூர்
- விஜய ரகுநாத நாயக்கர்
- Gurupuja
- தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜகோபால சுவாமி கோவில்
- ராஜகோபாலசுவாமி
- கோவில்
- விஜயா
தஞ்சாவூர்,பிப்.4: தஞ்சாவூடிை ஆண்ட மாமன்னர் விஜய ரகுநாத நாயக்கர் 349ம் ஆண்டு குருபூஜை விழா தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜகோபால சுவாமி கோயிலில் நடந்தது. தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ளது ராஜகோபால சுவாமி கோயிலில் தஞ்சையை ஆண்ட மாமன்னர் விஜய ரகுநாத நாயக்கரின் சிலை அமைந்துள்ளது. இந்நிலையில் தஞ்சை மண்டல மற்றும் தஞ்சை மாவட்ட தமிழ்நாடு நாயுடு பேரவை சார்பில் தஞ்சையை ஆண்ட மாமன்னர் விஜய ரகுநாத நாயக்கரின் 349வது குருபூஜை விழா தஞ்சாவூரில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மேலே வெளி ஊராட்சி முன்னாள் தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் ரவி நாயுடு முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜ்குமார் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபர் பிரபாகரன், மண்டல செயலாளர் ரமேஷ், மாவட்ட அவைத் தலைவர் லட்சுமணன், பொருளாளர் ரங்கராஜ், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுந்தர், லயன்ஸ் மணி, வக்கீல் சீனிவாசன் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள மூலை அனுமார் கோவில் அருகே இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து வடக்கு வீதியில் ராஜகோபால சுவாமி கோவில் நுழைவாயிலில் உள்ள மாமன்னர் விஜய ரகுநாத நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல் தஞ்சாவூர் நாயுடு பெருமக்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் சீதாராமன் செயலாளராக மகேந்திரன் பொருளாளர் பாஸ்கர் துணைத் தலைவர் பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் விஜய ரகுநாத நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
The post ராஜகோபால சுவாமி கோயிலில் விஜய ரகுநாத நாயக்கர் 349ம் ஆண்டு குருபூஜை விழா appeared first on Dinakaran.