×

செந்துறை ஒன்றியத்தில் ₹3.56 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் அண்ணா நினைவு நாளையொட்டி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் பொதுவிருந்து

 

பெரம்பலூர்,பிப்.4: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர்  மதுரகாளியம்மன் கோயிலில் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சி நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் அண்ணாவின் 55வது நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தி, திருக்கோயிலின் சார்பில் வழங்கப்பட்ட புடவைகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினர்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவைப் போற்றும் வகையிலும், தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அவராற்றிய பணியினை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பொது விருந்து வழங்கிடவும், மேலும் கோயிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட துணிகளில் நல்ல நிலையில் உள்ள புடவைகளை ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் சார்பில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு பொது விருந்தும் 200 நபர்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post செந்துறை ஒன்றியத்தில் ₹3.56 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் அண்ணா நினைவு நாளையொட்டி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் பொதுவிருந்து appeared first on Dinakaran.

Tags : Sentura Union ,Siruvachur Madurakaliamman Temple ,Anna Memorial Day ,Perambalur ,Siruvachur ,Madurakaliamman temple ,Anna ,Siruvachur Mathura Kaliyamman ,Senthuri union ,Anna's ,day ,Dinakaran ,
× RELATED செந்துறை ஒன்றியத்தில் 100% வாக்களிக்க விழிப்புணர்வு காணொளி