×

தூத்துக்குடி அருகே பரிதாபம் கடலில் தவறி விழுந்து சங்குகுளி மீனவர் பலி

தூத்துக்குடி, பிப்.4: தூத்துக்குடி அருகே கடலில் சங்கு குளிக்கச் சென்ற மீனவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி கீழ அரசரடி துப்பாஸ் பட்டியைச் சேர்ந்த ஞானதாசனின் மகன் இசக்கிமுத்து (42). இவர் திரேஸ்புரம் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான படகில் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 9 பேருடன் கடலுக்கு சங்கு குளிக்கச் சென்றார். தூத்துக்குடியில் இருந்து சுமார் 8 கடல் மைல் தூரத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர் கடலில் தவறி விழுந்தார். இதையடுத்து பதறிய சக மீனவர்கள், உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூத்துக்குடி அருகே பரிதாபம் கடலில் தவறி விழுந்து சங்குகுளி மீனவர் பலி appeared first on Dinakaran.

Tags : Paritapam sea ,Thoothukudi ,Ishakhimuthu ,Gnanadasan ,Asaradi Tubpas Patti ,Tuticorin ,Threspuram ,Ravichandran ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...