×

தரகம்பட்டி அருகே பண்ணப்பட்டியில் புங்காற்றின் நடுவே நடப்பட்ட புதிய மின்கம்பங்கள் தாந்தோணி ஒன்றிய பகுதியில் ரூ.41.44 லட்சத்தில் புதிய திட்டப்பணி

 

கரூர், பிப்.4:தாந்தோணி ஒன்றிய பகுதியில் ரூ.41.44 லட்சம் மதிப்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை எம்எல்ஏ சிவகாம சுந்தரி நேற்று துவக்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு திட்ட வளர்ச்சி பணிகள் அறிவித்து நல்லமுறையில் செயல்படுத்தி வருகிறார். இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி தாந்தோணி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட கோயம்பள்ளி ஊராட்சியில் ரூ.17.42 லட்சம் மதிப்பில் கோயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானமும், மேலப்பாளையம் ஊராட்சிக்கு ரூ.12.60 லட்சம் மதிப்பில் அருந்ததியர் காலனி அருகில் சமுதாய கூடமும், பள்ளபாளையம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.11.42 லட்சம் மதிப்பில் பள்ளி விளையாட்டு மைதானம் ஆகிய 3 பணிகளுக்கும் ரூ.41.44 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கி பூமி பூஜை தாந்தோணி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, ஒன்றிய குழு தலைவர் சிவகாமி ஆகியோர் கலந்துகொண்டு புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையர் பரமேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வசந்தி, சங்கீதா, ஒன்றிய தொழில்நுட்ப அமைப்பாளர் கார்த்திகேயன், திமுக நிர்வாகி பள்ளபாளையம் கோவிந்தராஜ், செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில், மாவட்டத் துணைச் செயலாளர் பூவை ரமேஷ்பாபு, முன்னாள் மாவட்ட திமுக துணைச் செயலாளர் இரா பிரபு, தாந்தோணி மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர் கண்ணையன் உள்பட பட பலர் கலந்துகொண்டனர்.

The post தரகம்பட்டி அருகே பண்ணப்பட்டியில் புங்காற்றின் நடுவே நடப்பட்ட புதிய மின்கம்பங்கள் தாந்தோணி ஒன்றிய பகுதியில் ரூ.41.44 லட்சத்தில் புதிய திட்டப்பணி appeared first on Dinakaran.

Tags : Pannapatti ,Dharagambatti ,Dandoni ,Karur ,MLA ,Sivagama Sundari ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Dandoni union ,Dinakaran ,
× RELATED தோகைமலை அருகே மது விற்ற பெண் உள்பட இருவர் கைது