×

செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமையில்அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

திருப்பூர், பிப்.4: பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று திருப்பூர் குமரன் சிலை அருகே உள்ள அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதன் பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்திற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அண்ணாவின் நினைவு நாளை போற்றும் விதமாக அண்ணாவின் செயல்பாடுகள் குறித்தும், கழகத்திற்காக மேற்கொண்ட பணிகள் குறித்தும் நிர்வாகிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.

The post செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமையில்அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Selvaraj ,Anna Memorial Day ,Tirupur ,Anna's Memorial Day ,North District ,DMK ,Anna ,Periyar ,Tirupur Kumaran ,Selvaraj MLA ,Dinakaran ,
× RELATED உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்