×

திருப்புத்தூரில்பாலித்தீன் பைகள் பறிமுதல்:வியாபாரிகளுக்கு அபராதம்

திருப்புத்தூர், பிப். 4: திருப்புத்தூரில் உள்ள கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தஅதிகாரிகள், வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர். திருப்புத்தூர் பேரூராட்சி பகுதிகளில் உணவு பாதுகாப்புதுறை, சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சிதுறையினர் இணைந்து கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பாலித்தீன் பைகள் விற்பனை தொடர்பாக ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இதன்படி பேருந்து நிலையம், வானியன் கோயில் தெரு, மதுரை ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இந்த பணிகள் நடைபெற்றன. இதில் தடை செய்யப்பட்ட எடை குறைவான பாலித்தீன் பைகள் விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் 3 பேருக்கு ரூ.1700 அபராதம் விதிக்கப்பட்டது.

அவர்களிடம் இருந்து 13 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கோயில்களுக்கு அருகே பீடி, சிகரெட் விற்பனை செய்தவர்கள் மற்றும் செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்றவர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வு பணியில் உணவு பாதுகாப்பு அலுவலர் தியாகராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்ட் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

The post திருப்புத்தூரில்பாலித்தீன் பைகள் பறிமுதல்:வியாபாரிகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,safety department ,
× RELATED குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல...