- ராமநாதபுரம்
- PTO
- ராஜா
- விருதுநகர் மாவட்ட கலெக்டர்
- உம்முல்ஜாமியா
- மதுரை மாவட்ட கலெக்டர்
- மல்லிகா சிவகங்கை
- செல்லம்மாள்
ராமநாதபுரம், பிப்.4: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிடிஓ ராஜா, விருதுநகர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், உம்முல்ஜாமியா மதுரை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், மல்லிகா சிவகங்கை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், செல்லம்மாள் விருதுநகர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் பதவி உயர்வு கிடைக்க பெற்றனர். இதுபோன்று போகலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த சோமசுந்தர் மண்டபம் யூனியனுக்கு பிடிஓவாகவும், நயினார்கோயில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த கணேசன் திருவாடானை யூனியன் பிடிஓவாகவும், கமுதி துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த முத்துராமலிங்கம் நயினார்கோயில் யூனியன் பிடிஓவாகவும், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் தனிக்கை துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த லெட்சுமி ஆர்.எஸ்.மங்கலம் யூனியனுக்கும் பிடிஓகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அதன்படி ஆர்.எஸ்.மங்கலம் பிடிஓவாக இருந்த ராஜேந்திரன், திருப்புல்லானி யூனியன் பிடிஓவாகவும், திருப்புல்லாணி பிடிஓவாக இருந்த மணிவண்ணன், போகலூர் பிடிஓவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். போகலூர் பிடிஓவாக இருந்த பாலசுப்ரமணியன் கலெக்டர் அலுவலக மேலாளராகவும், அலுவலக மேலாளராக இருந்த அண்ணாதுரை, மாவட்ட ஊராட்சி முகமை 100 நாள் வேலை திட்ட பிடிஓவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்று பிடிஓவாக இருந்த ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியரக பிடிஓவாகவும், நயினார்கோயில் பிடிஓவாக இருந்த முரளிதரன் கடலாடி பிடிஓவாகவும், கடலாடி யூனியன் பிடிஓவாக இருந்த ஜெயஆனந்தன், கடலாடி கிராம ஊராட்சி பிடிஓவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மண்டபம் பிடிஓவாக இருந்த மலைராஜன் ஆர்.எஸ்.மங்கலம் கிராம ஊராட்சி பிடிஓவாகவும், திருவாடானை பிடிஓ கோட்டைராஜ், கமுதி கிராம ஊராட்சி பிடிஓவாகவும், கமுதி பிடிஓ சங்கரபாண்டியன் மண்டபம் கிராம ஊராட்சி பிடிஓவாகவும், மண்டபம் கிராம ஊராட்சி பிடிஓ நடராஜன் மாவட்ட உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post மாவட்டத்தில் பிடிஓக்கள் பணி மாற்றம் appeared first on Dinakaran.