×

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்த்தேக்கங்கள் நிறைந்திருப்பதால் கோடை காலத்தில் பற்றாக்குறை ஏற்படாது: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் பருவ மழை தொடங்கி தொடர்ந்து மழை பெய்ததால் நீர் இருப்பு கணிசமாக இருப்பு இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி பூண்டி தீர்த்தக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 2,899 மில்லியன் கன அடி இருப்பது உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக 188 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 774 மில்லியன் நீர் இருப்பு உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக 16 கன அடி கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 2,646 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக 189 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 3256 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து 144 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக 140 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது 465 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மொத்தத்தில் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவான 11,757 மி.கன அடியில் தற்போது 9,843 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. இதனால் வரும் கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும் என்றும், எந்த பற்றாக்குறையும் ஏற்படாது எனவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்த்தேக்கங்கள் நிறைந்திருப்பதால் கோடை காலத்தில் பற்றாக்குறை ஏற்படாது: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Water Resources Department ,Thiruvallur ,Bundi Thirthakam ,
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...