×

நடைபாதை, பூங்கா வசதியுடன் மணலி ஏரி புனரமைப்பு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர்: மணலி மண்டலம், 20வது வார்டு, காமராஜ் சாலையில் சுமார் 32 ஏக்கர் பரப்பளவு கொண்ட மணலி ஏரி உள்ளது. மழைக்காலத்தில் சுற்றுவட்டாரத்தில் இருந்து வரும் மழைநீர் இந்த ஏரியில் சேமிக்கப்படுவதால், நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இந்த ஏரி பராமரிக்கப்படாததால், ஆகாயத்தாமரை வளர்ந்து, சகதியாக மாறியது. இதனால், மழைக்காலத்தில் போதிய நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும், என்று மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

அதன்பேரில், கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த ஏரி புனரமைக்கப்படும், என திமுக தேர்தல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4.70 கோடி செலவில் மணலி ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, நடைபாதை, பூங்கா, இருக்கை போன்ற வசதிகளுடன் சீரமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான தொடக்க விழா, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்று, பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, கவுன்சிலர்கள் காசிநாதன், ராஜேந்திரன், நந்தினி சண்முகம், சந்திரன், தீர்த்தி, உதவி ஆணையர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் பிரதீப்குமார், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நடைபாதை, பூங்கா வசதியுடன் மணலி ஏரி புனரமைப்பு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Manali lake ,MLA ,Manali Mandal ,20th Ward, Kamaraj Road ,
× RELATED மணலி மண்டலம் 16வது வார்டில் பழுதடைந்த...