×

தேசிய திறனாய்வு தேர்வை 6100 மாணவர்கள் எழுதினர்

 

தர்மபுரி, பிப்.4: தர்மபுரி மாவட்டத்தில், 27 தேர்வு மையங்களில் 548 அரசு பள்ளிகளை சேர்ந்த 6100 மாணவ, மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வு நேற்று எழுதினர். தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத தகுதி ஆனவர்கள். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு ₹48 ஆயிரம் இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

அதன்படி, 2024-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு, அரசு உதவி பெறும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள் நேற்று (3ம் தேதி) தேசிய திறனாய்வு தேர்வு எழுதினர். இத்தேர்வு தர்மபுரி மாவட்டத்தில் 27 மையங்களில் நேற்று எழுதினர். மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி 118, உயர்நிலைப்பள்ளி 108, நடுநிலைப்பள்ளி 322 என மொத்தம் 548 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 6100 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் தேர்வு மையத்தில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கல்வி அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

The post தேசிய திறனாய்வு தேர்வை 6100 மாணவர்கள் எழுதினர் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,National ,Test ,Department of School Education ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...