×

பாம்பனில் ரூ.2.25 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து படகில் ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதிக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாம்பன் பகுதிக்கு வந்த மத்திய புலனாய்வு பிரிவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பாம்பன் குந்துகால் துறைமுகம் பகுதியில் வேகமாக டூவீலரில் சென்றவரை விரட்டி பிடித்து சோதனை செய்தனர்.

அதில், டூவீலரின் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தங்கத்தை கடத்தி வந்த நம்புராஜனை(39) கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், இலங்கையில் இருந்து படகில் தங்கக்கட்டிகள் கடத்தப்பட்டதும், அதன் மதிப்பு ரூ.2.25 கோடி என தெரியவந்தது.

 

The post பாம்பனில் ரூ.2.25 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pamban ,Rameswaram ,Central Intelligence Agency ,Sri Lanka ,Pampan ,
× RELATED பாம்பன் கடலோரப் பகுதியில் பரவி...