×

கலியுக அம்பேத்கர் என வர்ணித்து அண்ணாமலைக்கு வைத்த பேனர் எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றம்: வந்தவாசியில் பரபரப்பு

வந்தவாசி: வந்தவாசியில் அண்ணாமலையை வரவேற்று ‘கலியுக அம்பேத்கரே வருக’ என பாஜவினர் வைத்திருந்த பேனருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நாளை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அண்ணாமலையை வரவேற்று நகரம் முழுவதும் பாஜ வினர் பேனர் வைத்துள்ளனர். இதில், அங்குள்ள அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள பேனரில் ‘கலியுக அம்பேத்கரே வருக’ என்ற வாசகம் அடங்கிய பேனரை நேற்று அந்த கட்சியினர் வைத்தனர்.

இதனைக்கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரஅமைப்பாளர் விஜய், மாவட்ட துணை அமைப்பாளர் டேனியல், இந்திய குடியரசு கட்சி மாநில அமைப்பு செயலாளர் மோகன், மாவட்ட செயலாளர் பாஸ்கரன், புரட்சி பாரத மாவட்ட செயலாளர் ஜோசப் உள்ளிட்ட தலித் அமைப்பினர் ஆகியோர் பேனரை அகற்றவேண்டும் என கோஷமிட்டனர். தகவலறிந்த டிஎஸ்பி ராஜிவ் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேனர் வைக்கக்கூடாது எனக்கூறினர். தொடர்ந்து பாஜ நகர செயலாளர் சுரேஷிடம் போலீசார் கூறியதையடுத்து அந்த பேனரை பாஜவினர் எடுத்துச்சென்றனர்.

 

The post கலியுக அம்பேத்கர் என வர்ணித்து அண்ணாமலைக்கு வைத்த பேனர் எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றம்: வந்தவாசியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kaliyuga ,Annamalai ,Vandavasi ,Kaliyuga Ambedkare Varuka ,BJP ,president ,Tiruvannamalai district ,Kaliyuga Ambedkar ,
× RELATED யார் அணையப்போற விளக்குனு ஜூன் 4ல்...