×

தமாகா யாருடன் கூட்டணி? 12ம் தேதி பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்: ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து வரும் 12ம் தேதி கட்சி பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்று ஜி.கே.வாசன் கூறினார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமாகா சார்நில் மாநில அணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம், தி.நகர் காமராஜர் நினைவு இல்லம் அருகே உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமாகா தலைவர் ஜி.ேக.வாசன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், சக்திவடிவேல், மாநில பொதுச் செயலாளர்கள் ஜவஹர்பாபு, திருவேங்கடம், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், அணி தலைவர்கள் ஆர்.எஸ்.முத்து, யுவராஜா, ராணி கிருஷ்ணன், கே.ஆர்.டி.ரமேஷ், சங்கர், தரணி மற்றும் மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், பிஜூ சாக்கோ, முனவர் பாஷா, கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவருடைய வீட்டில் சந்தித்து பேசினேன். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையிடமும் தொலைபேசி மூலம் பேசினேன்.

நாளை பாமக தலைவர் அன்புமணி ராமதாசை சந்தித்து பேச உள்ளேன். தமாகாவை பொறுத்த வரை அனைத்து கட்சிகளுடன் நட்புரீதியாக தான் பழகி வருகிறோம். தேர்தல் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் என அனைவரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்ட பிறகு தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். வரும் 12ம் தேதி சென்னையில் தமாகா செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் கூட்டணி குறித்த முடிவை பொதுக்குழுவில் தான் தீர்மானிப்பார்கள். அதேபோன்று தான் நாங்களும் ஆலோசித்து முடிவு செய்து கூட்டணி குறித்து அறிவிப்போம். கூட்டணியை பொருத்தவரை நான் மட்டும் முடிவு செய்ய முடியாது. கட்சியினரிடம் ஆலோசித்து தான் முடிவெடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post தமாகா யாருடன் கூட்டணி? 12ம் தேதி பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்: ஜி.கே.வாசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamaka ,General ,GK Vasan ,CHENNAI ,GK ,Vasan ,Tamaga ,Tamaka Charnil ,General Assembly ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக...