×

சம்பந்தமில்லாமல் எப்ஐஆரில் சேர்க்கப்பட்ட வழக்கறிஞர் பெயரை நீக்க வேண்டும்: கிண்டி போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சம்பந்தமில்லாமல் எப்ஐஆரில் ேசர்க்கப்பட்ட இளம் பெண் வழக்கறிஞரின் பெயரை நீக்குமாறு போலீசாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ண்டி ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. ைசதாப்பேட்டை நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக இருக்கிறார். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஏழுமலை, அன்புராஜ், ரங்கநாயகி ஆகியோருக்கும் இடையே வீட்டு வாடகை விஷயத்தில் பிரச்னை இருந்துள்ளது. இதையடுத்து, தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக ஏழுமலை உள்ளிட்டோர் மீது கிண்டி போலீஸ் நிலையத்தில் பெரியசாமி புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், கடந்த ஆண்டு ஜூலையில் வழக்கறிஞராக பதிவு செய்த பக்கத்து வீட்டில் வசிக்கும் நிஷாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்த புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பெரியசாமி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சைதாப்பேட்டை 9வது நீதிமன்ற மாஜிஸ்திரேட், பெரியசாமியின் புகார் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், ஏழுமலை, அன்புராஜ், ரங்கநாயாகி, நிஷா ஆகியோர் மீது கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் நிஷாவின் பெயரை வழக்கிலிருந்து நீக்கக்கோரியும் ஏழமலை உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் மரிய லெபானியா பிரின்சி ஆஜராகி, நிஷாவின் தாய் தூய்மை பணியாளராக வேலை செய்துவருகிறார். மிகுந்த சிரமத்திற்கு இடையே மகளை படிக்கவைத்து வழக்கறிஞராக்கியுள்ளார். நிஷாவுக்கும் இந்த புகாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. 24 வயதான நிஷா தற்போது சிவில் நீதிபதி ேதர்வுக்கு தயாராகி வருகிறார். இந்த வழக்கால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, புகார்தாரர் ஒரு வக்கீல் குமாஸ்தா. அவருக்கு நிஷா வழக்கறிஞர் என்பது தெரியும். நிஷா எளிய குடும்பத்திலிருந்து வழக்கறிஞராக வந்துள்ளார். இதுபோன்று சட்டத்தை தவறாக பயன்படுத்தி ஒருவரை வழக்கில் சேர்த்திருக்க கூடாது.

ஒருவரை வழக்கில் சேர்க்கும்போது போலீசார் கவனத்துடன் செயல்பட வேண்டும். எனவே, இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையிலிருந்து வழக்கறிஞர் நிஷாவின் பெயரை கிண்டி போலீசார் நீக்க வேண்டும். மனுதாரர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post சம்பந்தமில்லாமல் எப்ஐஆரில் சேர்க்கப்பட்ட வழக்கறிஞர் பெயரை நீக்க வேண்டும்: கிண்டி போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Guindy police ,Chennai ,Chennai High Court ,Periyasamy ,Ndi Ekatuthangal ,Aysathapet ,Yehumalai ,Anburaj ,Ranganayake ,Court ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...