×

போக்குவரத்து துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு மருத்துவ முகாம்

பூந்தமல்லி: பூந்தமல்லி பகுதிகளில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, போக்குவரத்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கான மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம்தேதி முதல் பிப்ரவரி 14ம்தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை மேற்கு, தெற்கு, தென்மேற்கு, குன்றத்தூர், மீனம்பாக்கம் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, போரூர் சுங்கச்சாவடி அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர் நிகழ்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.

இம்முகாமில், சாலை வழியாக சென்ற வாகனங்களின் டிரைவர்களுக்கு கண், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தோல் சம்பந்தப்பட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும், மேல்சிகிச்சை தேவை எனில் அவர்களுக்கு வட்டார போக்குவரத்து துறை சார்பில் சிகிச்சை தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டிரைவர்களுக்கு வேண்டிய குடிநீர், குளிர்பானங்கள் ஆகியவையும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மருத்துவ பரிசோதனையின்போது கண் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக கண் கண்ணாடி அணியவும், மருத்துவர்களின் சான்றிதழ் பெற்று வாகனத்தை இயக்கவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

The post போக்குவரத்து துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,National Road Safety Month ,Traffic Department ,Tamil Nadu Government Transport Department ,National Road Safety ,Transport Department ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லியில் கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது