×
Saravana Stores

பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு சீர் கொடுத்த இந்து, கிறிஸ்தவர்கள்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கொத்தமங்கலம் ஊராட்சியில் உள்ளது கடியாச்சேரி. இந்த கிராமத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் 250க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களும் உள்ளன. அவர்கள் தொழுகை செய்வதற்காக கடியாச்சேரியில் அல் மஸ்ஜித் மூஸா அஜீல் மஜித் என்ற புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, எம்எல்ஏ மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி, ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், வர்த்தகர் சங்க தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவையொட்டி மத நல்லிணக்க ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் கொத்தமங்கலம் ஊராட்சியை சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து பள்ளிவாசலுக்கு சீர் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சீர் கொண்டு வந்தனர்.

The post பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு சீர் கொடுத்த இந்து, கிறிஸ்தவர்கள் appeared first on Dinakaran.

Tags : Hindus ,Tiruthurapoondi ,Kadiacherry ,Kothamangalam Panchayat ,Thiruthurapoondi ,Tiruvarur District ,Al Masjid Musa Azeel ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் உலக போலியோ விழிப்புணர்வு பேரணி