×

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதன் பின்னணியில் பாஜக உள்ளது: அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: நடிகர் விஜய் கட்சி தொடங்கியதன் பின்னணியில் பாஜக இருப்பதாக அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர்; தமிழ்நாட்டில் வளர்ந்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் பாஜக உள்ளது என வெளிப்படையாக தெரிகிறது. ரஜினிகாந்தை கட்சி தொடங்கச் சொல்லி வற்புறுத்தினார்கள்.

ஆனால், அவர் தப்பித்துவிட்டார். அடுத்த தூண்டில் விஜய்தான். தமிழ்நாட்டில் வளர்ச்சியை பெற திரைத்துறையில் இருந்து ஒரு முகம் தேவை என பாஜக நினைக்கிறது. அந்த தேவையை விஜய் பூர்த்தி செய்வார் என நம்புகிறார்கள். நடிகர் விஜயும் தற்போது பாஜகவின் ஆசையை நிறைவேற்ற களமிறங்கியுள்ளார். விஜயை பற்றி அறிந்தவர்கள் மெல்ல வெளிவருவார்கள்.

சட்டமன்ற தேர்தலில் கவனம் னம் செலுத்தப்போவதாக விஜய் கூறியதும், பாஜகவின் திரைக்கதை வசனமே. பாஜக, விஜய்க்கு வாழ்த்துகள். ஐந்தே நிமிடங்களில் அல்லது ஒரு பாடலில் மாற்றம் கொண்டுவர அரசியல் ஒன்றும் சினிமா இல்லை. பாஜகவை காப்பாற்ற, அவர்களின் கைப்பாவையாக விஜய் செயல்படுவார் இவ்வாறு கூறினார்.

The post நடிகர் விஜய் கட்சி தொடங்கியதன் பின்னணியில் பாஜக உள்ளது: அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Vijay ,Adimuga ,Gowai Sathyan ,Chennai ,Tamil Nadu ,Bhajaka ,
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch