சென்னை: டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்களை பாதுகாக்க மேட்டூர் அணையில் இருந்து மாலை முதல் கூடுதல் நீர் திறக்கப்பட உள்ளது. ஏற்கனவே 600 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில் வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. சம்பா பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து 2 டி.எம்.சி. நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். திருவாரூரில் 4,715 ஏக்கருக்கும், நாகையில் 18,059 ஏக்கரும் தண்ணீர் பற்றாக்குறையால் சம்பா நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளின் வைத்த கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
The post சம்பா பயிர்களை பாதுகாக்க மேட்டூர் அணையில் மாலை முதல் 6,000 கனஅடி நீர் திறப்பு!! appeared first on Dinakaran.