×

கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இவ்வாறு செய்தேன்: உயிரோடு இருப்பதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டு விளக்கம்..!!

மும்பை: உயிரோடு இருப்பதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாண்டே, அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்து வந்தாா். சமூக ஊடக பக்கங்களில் சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தவாறு வலம் வருபவராக மக்களிடையே பிரபலமடைந்தவா் பூனம் பாண்டே.

இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பதிவில், பூனம் பாண்டே கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உயிரோடு இருப்பதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். மேலும், அதில், நான் உயிருடன் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இவ்வாறு செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இவ்வாறு செய்தேன்: உயிரோடு இருப்பதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டு விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Bollywood ,Poonam Pandey ,Mumbai ,
× RELATED ‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில்...