×

நாகூரில் நிலக்கரி துகள்கள் காற்றில் பரவுவதால் தர்கா மினராக்கள் பாதிப்பு: சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார்

காரைக்கால்: காரைக்கால் அதானி குழும துறைமுகத்திலிருந்து வெளியாகும் கரும் புகை காரணமாக நாகூர் தர்கா மினராக்கள் கருமை நிறத்தில் மாறியுள்ளது. காரைக்கால் மாவட்டம் வாஞ்சியூர் பகுதியில் செயல்பட கூடிய அதானி குழுமத்திற்கு சொந்தமான நிலக்கரி துறைமுகத்தில் கப்பலில் நிலக்கரி ஏற்றுமதி, இறக்குமதி செய்வதனால் அந்த நிலக்கரி துகள்கள் காற்றில் படர்ந்து உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவினுடைய தொன்மை வாய்ந்த கோபுரங்கள் பாதிப்படைவதாக தர்கா நிர்வாகத்தின் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நிலக்கரி துகள்கள் காற்றில் பரவுவதால் கிட்டத்தட்ட சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த தர்காவின் மினராக்கள் என்று சொல்லக்கூடிய கோபுரங்கள் மீது நிலக்கரி துகள்கள் படிந்து வெண்மைநிறத்தில் காட்சியளிக்கப்பட்ட அந்த கோபுரங்கள் முழுவதும் கருமை நிறத்தில் காட்சியளிக்கிறது. மார்க் குழுமத்திற்கு சொந்தமான அந்த நிலக்கரி துறைமுகத்தை 6 மாதத்திற்கு முன்பாக அதானி குழுமத்திற்கு கைமாறியது. இந்த நிலையில் அந்த துறைமுகத்தில் கடந்த 3 மாதங்களாக மிக அதிக அளவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகிறது. இத்தகைய சுழலில் நிலக்கரி துகள்களானது அதிகளவில் காற்றில் பரவுவதால் தர்காவின் 132 அடி கொண்ட கோபுரம், படிக்கட்டுகளில் துகள்கள் படர்ந்து கருமை நிறத்தில் காட்சியளிக்கிறது.

சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு கட்சியினரும் அந்த துறைமுகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தர்கா நிர்வாகத்தின் சார்பாக புகார் பதிவு செய்துள்ளனர். மேலும் சுற்று சூழல் துறையை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வை மேற்கொன்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் வைத்துள்ளனர். பொதுமக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலாப்பயணிகளும் இந்த நிலக்கரி துகள்கள் காற்றில் பரவுவதால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக சுவாச கோளாறுகள் உள்ளிட்ட நோய்களாலும், துணிகளை காயவிடும் போது அந்த துணிகளிலும் நிலக்கரி படர்வது, அதே போல மொட்டை மாடிகளில் நிலக்கரி துகள்கள் படர்வது போன்ற பல்வேறு இக்கட்டான சொல்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆகவே தமிழக அரசும், ஒன்றிய அரசும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.

 

The post நாகூரில் நிலக்கரி துகள்கள் காற்றில் பரவுவதால் தர்கா மினராக்கள் பாதிப்பு: சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார் appeared first on Dinakaran.

Tags : Nagore ,Karaikal ,Nagor ,Karaikal Adani Group ,Adani Group ,Vanjiyur ,Karaikal district ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...