×
Saravana Stores

ஐகோர்ட் உத்தரவுப்படி சிஎம்டிஏ நிர்வாகம் , ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது


சென்னை: ஐகோர்ட் உத்தரவுப்படி சிஎம்டிஏ நிர்வாகம் , ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகம் அமைந்துள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, போக்குவரத்துத் துறை ஆணையர் சண்முகசுந்தரம் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. அரசு போக்குவரத்துக் கழக இயக்குநர்கள், பொது மேலாளர்கள், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். வழக்கு விசாரணையின்போது அதிகாரிகளுடன் பேசி தீர்வு எட்டும்படி உயர்நீதிமன்றம் அறிவிறுத்தி இருந்தது. கிளாம்பாக்கத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24ம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கோயம்பேட்டில் தங்களது இடத்தில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். கிளாம்பாக்கத்திற்கு எடுத்துச்செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தைவிட பெரிய அளவில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. தூரத்தை தவிர வேறு எந்த அசவுகரியமும் இல்லை. பயணிகளின் வசதியையொட்டி நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பிரச்னையில் சுமூக தீர்வு காண வரும் சனிக்கிழமை பேச்சுவார்த்தைநடத்த போக்குவரத்து துறை தயாராக உள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

The post ஐகோர்ட் உத்தரவுப்படி சிஎம்டிஏ நிர்வாகம் , ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : CMDA ,Omni bus ,ICourt ,CHENNAI ,Thalamuthu Natarajan House ,Egmore ,Ansul Misra ,Commissioner ,Transport Department ,Dinakaran ,
× RELATED பண்டிகை கால நெரிசலை தவிர்க்க பரனூர்...