×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்.12ம் தேதி நடக்கிறது.

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி இம்மாதம் 13-ம் தேதி தேரோட்டம் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மற்றும் மாசித்திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றுத்துடன் துவங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. திருவிழா கொடிப்பட்டமானது பல்லக்கில் கோயிலிருந்து புறப்பட்டு, வீதி உலா வந்து கோயிலை சேர்கிறது. தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் மகர லக்னத்தில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சோடஷ அபிஷேகம், அலங்காரமாகி மகாதீபாராதனை நடைபெறுகின்றது.

பத்துநாட்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 13ம் தேதி அதிகாலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கடக லக்னத்தில் தேரோட்டம் நடைபெறுகின்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார், இணை ஆணையர், அலுவலக கண்காணிப்பாளர் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

The post திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Veilukanthamman temple ,Tiruchendur Subramania Swamy temple ,Tiruchendur ,Massithru festival ,Subramania Swamy temple ,Therotam ,Masithruvija ,Thiruchendur Subramania Swamy Temple ,Masitruvija ,Thiruchendur ,
× RELATED கோடை விடுமுறையை கொண்டாட கொளுத்தும் வெயிலிலும் குவிந்த பக்தர்கள்