×

திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் வட சென்னை, தென்சென்னை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது


சென்னை: திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் வட சென்னை , தென்சென்னை நிர்வாகிகள் ஆலோசனை தொடங்கியது. திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 9-வது நாளாக ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சென்னை அறிவாலயத்தில் கே.என்.நேரு உள்ளிட்டோர் குழு தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இன்று பிற்பகல் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்புக்குழு விவாதிக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு பணியாற்றும் வகையில் கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவை நமது கழகத் தலைவர்
மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைத்துள்ளார்கள். இக்குழுவின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வடசென்னை, தென்சென்னை நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் மக்களவை தொகுதி வாரியாக நடைபெற்று வருகின்றன. உழைக்கும் மக்களின் வாழ்வில் ஏற்றம் உண்டாக, #INDIA கூட்டணி வெற்றிவாகை சூடிடும் வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் ,

தொகுதி மேம்பாட்டுப் பணிகளின் தற்போதைய நிலை, தொகுதி மக்களின் தேவைகள் , தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவை குறித்து கழக நிர்வாகிகளிடம் விரிவாக கேட்டறிய உள்ளனர்.
மேலும், மாவட்ட பொறுப்பு அமைச்சர், மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட – ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்டக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

The post திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் வட சென்னை, தென்சென்னை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : North Chennai and South Chennai ,DMK Election Coordination Committee ,CHENNAI ,North Chennai ,South Chennai ,K.N. Nehru ,Chennai University ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு