×

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சினிமா துணை நடிகர் தாமோதர கண்ணனிடம் அடுத்தடுத்து நூதன முறையில் மோசடி..!!

சென்னை: சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சினிமா துணை நடிகர் தாமோதர கண்ணனிடம் அடுத்தடுத்து நூதன முறையில் மோசடி நடைபெற்றுள்ளது. சினிமா துணை நடிகர் தாமோதர கண்ணன் பயன்படுத்தி வந்த செயலி மூலம் செல்போனில் பேசிய இளம்பெண், ஆபாச படம் அனுப்ப ரூ.1,000 கேட்டுள்ளார். இதையடுத்து, ரூ.1,000 அனுப்பியும் ஆபாச படம் வராததால் தாமோதர கண்ணன், இளம்பெண்ணை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். இளம்பெண் செல்போன் ஸ்விட்ச் ஆப் என வந்த நிலையில், தாமோதர கண்ணனை வேறு நபர் போனில் தொடர்பு கொண்டார்.

சைபர் கிரைம் போலீசார் பேசுவதாகவும் ஆபாச படம் கேட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.60,000 அனுப்ப வேண்டும் என கூறியதை அடுத்து ரூ.13,000த்தை தாமோதர கண்ணன் அனுப்பியுள்ளார். சிறிது நேரம் கழித்து, சைபர் கிரைம் என பேசியவரின் செல்போனை தொடர்பு கொண்டபோது அதுவும் ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது. மோசடி குறித்து சந்தேகமடைந்த தாமோதர கண்ணன் மோசடி, இதுகுறித்து வியாசர்பாடி போலீசில் புகார் அளித்தார். சினிமா துணை நடிகர் தாமோதர கண்ணனிடம் அடுத்தடுத்து நூதன முறையில் மோசடி அரங்கேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சினிமா துணை நடிகர் தாமோதர கண்ணனிடம் அடுத்தடுத்து நூதன முறையில் மோசடி..!! appeared first on Dinakaran.

Tags : Damodar Kannan ,Damodar ,Damodhara Kannan ,
× RELATED சாவர்க்கர் பிறந்தநாளையொட்டி அவரது...