×

சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார் துவரங்குறிச்சி- மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் 40 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இடித்து அகற்றம்

துவரங்குறிச்சி, பிப்.3: துவரங்குறிச்சியில் இருந்து மணப்பாறை செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அமைய உள்ளதால் துலுக்கம்பட்டி, ஆத்துப்பட்டியில் சாலையோரம் வசித்த 40 ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இடித்து அகற்றினர். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 1வது மற்றும் இரண்டாவது வார்டு துலுக்கம்பட்டி, ஆத்துப்பட்டி பகுதியில் துவரங்குறிச்சியில் இருந்து மணப்பாறை வரை செல்ல புதிய நான்கு வழி சாலை அமைய உள்ளது. துவரங்குறிச்சியில் இருந்து காரைப்பட்டி வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் வரையிலும் முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. நான்குவழிச்சாலை அமைய உள்ள துலுக்கம்பட்டி, ஆத்துப்பட்டி பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சாலையோரமாக வசித்து வந்தனர்.

இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு நெடுஞ்சாலைத்துறை மூலம் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் இருந்து வீடுகளை காலி செய்பவர்கள் சிலருக்கு வேறு இடத்தில் மாற்று வீட்டு மனை வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி குடியிருப்பு வாசிகள் வீடுகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலை துறையினர் ஐந்து பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வந்து நெடுஞ்சாலைத் துறையின் உதவி கோட்ட பொறியாளர் சுப்பையா தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. உதவி பொறியாளர் பிரவீன் ராஜ், ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் சாலை பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் சில குடியிருப்பு வாசிகள் வீடுகளை அவர்களே காலி செய்து கொண்டனர். சிலர் முறையாக அளவீடு செய்யாமல் வீடுகளை காலி செய்ய மறுத்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக மின்வாரிய ஊழியர்கள் மூலம் அப்பகுதியில் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை துண்டித்தனர்.

அதனைத் தொட ர்ந்து வருகின்ற திங்கட்கிழமை துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி நகர் புற எல்லையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உதவி கோட்ட பொறியாளர் சுப்பையா தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு பணிகள் காலை 8 மணிக்கு துவங்கி மாலை 6 மணிவரை மொத்தம் 11 மணிநேரம் நடைபெற்றது. மேலும் முன்னதாக ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதையொட்டி பாதுகாப்பு பணிக்காக 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார் துவரங்குறிச்சி- மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் 40 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Soundarabandian MLA ,Dwarankurichi-Manaparai National Highway ,Duvarangurichi ,Manaparai ,Tulukambatti ,Athupatti ,Trichy District ,Ponnampatti ,Soundarapandian MLA ,Duvarangurichi-Manaparai National Highway ,Dinakaran ,
× RELATED வளநாட்டில் பொன்னர்-சங்கர் திருவிழா