×

துறையூர் அருகே பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே மண்டல அளவில் கபடி போட்டி

துறையூர், பிப்.3: துறையூர் அருகே பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே நடந்த மண்டல அளவிலான கபடி போட்டியில் கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் பெற்றது. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்ணனூர் இமயம் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. போட்டியில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தொட்டியம், முசிறி பகுதி கல்லூரியில் இருந்து 15 அணிகள் பங்கேற்றன. போட்டியை துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற கபடி போட்டியில் தொட்டியம் கொங்குநாடு பாலிடெக்னிக் முதலிடத்தையும், திருச்சி அரசு பாலிடெக்னிக் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.வெற்றி பெற்ற அணிகளுக்கு இமயம் கல்லூரி தலைவர் ஆண்டி பாராட்டி பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இமயம் கல்லூரி முதல்வர் தர், ஏ ஜி எம் நிறுவனர் ஜனார்த்தனன், மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ராஜா செய்திருந்தார்.

The post துறையூர் அருகே பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே மண்டல அளவில் கபடி போட்டி appeared first on Dinakaran.

Tags : Zonal Level Kabaddi Tournament ,Polytechnic Colleges ,Dariyur ,Dharayur ,Kongunadu Polytechnic College ,zonal level kabaddi ,level kabaddi ,Kannanur Imam Polytechnic College ,Thartiyur ,Trichy district ,Zonal Level Kabaddi Competition ,Dinakaran ,
× RELATED துறையூர் பகுதியில் 2 பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் பலி