×

கழுகுமலையில் அரசு ஊழியர் வீட்டில் புகுந்த 12 அடி நீள பாம்பு

கழுகுமலை, பிப். 3: கழுகுமலை ஆறுமுகா நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (57), அரசு ஊழியர். நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் வழக்கம்போல் வீட்டில் இருந்தனர். அப்போது 12 அடி நீள சாரைப்பாம்பு, அருகில் உள்ள நீரோடையில் இருந்து வீட்டில் புகுந்தது. வீட்டின் அறை பகுதியில் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்த ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறினர். இதுகுறித்து கழுகுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய சிறப்பு அலுவலர் (போக்குவரத்து பிரிவு) மாலையாண்டி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் பதுங்கி இருந்த 12 அடி நீள சாரைப் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் பிடிபட்ட பாம்பை, கழுகுமலை அருகேயுள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

The post கழுகுமலையில் அரசு ஊழியர் வீட்டில் புகுந்த 12 அடி நீள பாம்பு appeared first on Dinakaran.

Tags : Kalgukumalai ,Kalkumalai ,Ravichandran ,Kalgukumalai Arumuga ,
× RELATED கோவில்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி